பொறியியல் மாணவருக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்!!!

பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் எனப்படும் தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்காக இணையதளம் வாயிலாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்-ஆஃப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.