பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்றுமுதல் தொடக்கம்

தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது.

 தமிழ்நாட்டில் உள்ள 431 பொறியியல் கல்லுரிகளில் சேர, சிறப்பு பிரிவு மாணவர்களுக்காக கலந்தாய்வு ஆகஸ்டில் நடந்தது. கடந்த 7-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொதுபிரிவு கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இந்த மாணவர் சேர்க்கை குழுவின் அதிகார பூர்வ இணையதளமான https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கான login மற்றும் password ஆகியவற்றை பயன்படுத்தி மாணவர்கள் இந்த முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை இந்த முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லூரிகள் மற்றும் துறைகளை தேர்வு செய்வது தொடர்பாக ஏற்கனவே மாதிரி வீடியோ அந்த இணையதளத்திலும், அரசின் அதிகார பூர்வ யூடியூப் தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று தொடங்கி 4 கட்டங்களாக இந்த கலந்தாய்வானது நடைபெறுகிறது. சுமார் 1 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்திருந்தார். சிறப்பு பிரிவில் அரசு பள்ளியில் படித்து 7.5 % இடஒதுக்கீத்தின் கீழ் 510 மாணவர்களும் பொதுப்பிரிவில் 610 மாணவர்களும் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வு முடிவுக்காக இந்த பொதுப்பிரிவு கலந்தாய்வானது தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி இன்று இந்த கலந்தாய்வானது தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி நவம்பர் மாதம் வரை 4 கட்டங்களாக பொதுப்பிரிவு கலந்தாய்வானது நடைபெறுகிறது. 1,58,000 மாணவர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

84 − 76 =