ரோட்டரி மாவட்டம் 3000த்தின் பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆக்சிசன் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி.
வெளிநாடுவாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்ட ஆக்ட் கிராண்ட்ஸ் என்ற அமைப்பு ரோட்டரி சங்கங்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிசன் சிலிண்டர்கள் வழங்க முன்வந்துள்ளார்கள்.ஆக்ட் கிராண்ட்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு அதன்மூலம் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி சங்கத் தலைவர் க.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. ஆக்சிசன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தமிழ்ச் செல்வியிடம் வழங்கி தந்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிருவாகிகள் செயலர் மலைச்சாமி, பொருளர் முத்துக்குமார், முன்னாள் தலைவர்கள் சரவணன், காமாட்சி, ரமேஷ், குமாரசாமி, தட்சிணாமூர்த்தி, முருகேசன், உறுப்பினர்கள் பார்த்திபன், செல்வகுமார், கணேசன், சுதாகரன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.