புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி செவலூர் ஊராட்சியில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் செவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா முத்துக்குமார், வார்டு உறுப்பினர் திருஞானசம்பந்தம் மற்றும் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி சிறுவர்கள் என ஏராளமானோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது, இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.