புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பொன்னன், அமரன் நினைவுகளில் ஒன்றான அமரகண்டன் குளம் தூர்வாரும் பணி புதுகை வரலாறு நாளிதழின் எதிரொலியாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறப்பாக நடைபெற்றது. திடீரென பருவமழை பொய்த்ததால் பணி முடங்கியது.
இதனைத் தொடர்ந்து பொன்னமராவதி பொதுமக்கள் பணி முடங்கியதால் வருத்தத்துடன் இருந்த நிலையில், மீண்டும் குளம் தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில் பொன்னமராவதி பகுதி பொது மக்களின் பல நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. தற்போது தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.