புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பி.எஸ். என்.எல், எக்சேஞ்ச் எதிரில் மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனை புதிதாக அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை 9.30மணிக்கு நடைபெற்றது. மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எஸ். பெரியண்ணன் செட்டியார் வரவேற்றார், இதனைத் தொடர்ந்து தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா ,கலெக்டர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர், மேலும் மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனை பொன்னமராவதியில் உள்ள அதி நவீன வசதிகளுடன் கூடிய 50 படுக்கைகள் கொண்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக அமைந்துள்ளது. இதில் இரண்டு மாடுலர் ஆப்ரேஷன் தியேட்டர்கள், சி.டி. ஸ்கேன் வசதி இ.சி.ஜி. எக்கோ, ட்ரெட் மில் டெஸ்ட்,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே ,லேப் டயாலிசிஸ், ஐ.சி.யு. புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, என பல நவீன வசதிகளுடன் கூடிய அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன.