Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

திருப்புவனம் வைகையாற்றில் குடில் அமைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிராம திருவிழா

திருப்புவனத்தில் உள்ள வைகையாற்றில் பச்சை ஓலையில் குடில் அமைத்து பூஜையறை பெட்டி வைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம்,...
Homeகுற்றம்பொன்னமராவதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

பொன்னமராவதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

பொன்னமராவதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு  வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துகொண்டே இருந்தது, இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் பொன்னமராவதி காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், இன்ஸ்பெக்டர் தனபாலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து இருசக்கர வாகனங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

இதில் சிறப்பாக செயல்பட்டதாக பொன்னமராவதி போலீசார்கள் விக்னேஷ்குமார், செந்தில் ,வரதராஜன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

x
error: Content is protected !!
%d bloggers like this: