புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் சரகத்திற்கு உட்பட்ட பேருந்து பணிமனை முன்பு இன்று காலை பொன்னமராவதியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் பிரதான சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் ஜே.ஜே.நகரிலிருந்து பொன்னமராவதிக்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்காக வந்து கொண்டிருந்ததாகவும். அதன் எதிர் திசையில் வந்த டாட்டா ஏசி நான்கு சக்கர வாகனத்தை மது போதையில் ஓட்டி வந்த கருப்பையா மகன் நாகராஜன் (37) என்ற நபர் நேருக்கு நேராக மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனம் ஓட்டி வந்த மகேந்திரன் சிங் என்ற வடமாநில தொழிலாளி மூளை சிதறி இறந்து விட்டார்.
இரு சக்கர வாகனத்தின் பின் அமர்ந்திருந்த ஹரி பாபு சிங் என்ற நபருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பிஎம்ஜிஹச்-க்கு ஹரி பாபு சிங் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேற்படி இறந்தவரின் பிரேதம் பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆட்சி மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டாட்டா ஏசி நான்கு சக்கர வாகனத்தை குடிபோதையில் ஓட்டி வந்த நாகராஜ் என்பவர் சுயநினைவின்றி மருத்துவமனையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.