பொன்னமராவதியில் கலைத்திருவிழா: மாணவிகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பிலான கலைத்திருவிழா நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலில்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தலின்படி, மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் மணிவண்ணன் ஆலோசனையின்படி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமையில் வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம், வட்டார வள மேற்பார்வையாளர் நல்லநாகு முன்னிலையில் தொடங்கியது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இக்கலைதிருவிழாவில் மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் 100க்கும் மேற்பட்ட மாணவிகளின் நாட்டுப்புற கிராமிய நடனங்களை ஆடி அனைவரது பாராட்டையும் பெற்றனர். மேலும் அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா முன்னிலையில் மாணவிகளுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 57 = 59