புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வாகன ஓட்டிகளுக்கும் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பிகே.வைரமுத்து அறிவுறுத்தலின்படி பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி.கண்ணப்பன் தலைமையில் அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடியதுடன் பேருந்தில் பயணம் செய்த பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உயர்நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடினர்.மேலும் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார் என்று கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் பொன்னமராவதி பேரூர் அதிமுக செயலாளர் ராஜேந்திரன், பொன்னமராவதி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் பழனியாண்டி, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் செயலாளர் வேந்தன்பட்டி பழனியப்பன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொருளாளர் அம்பி, வேகுப்பட்டி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் முத்து, அதிமுக நிர்வாகிகள் புதுவளவு பிடாரி கோவில் மாமுண்டிசெல்வம்,கல்லம்பட்டி கணேசன், ஆலவயல் சரவணன், நெடுஞ்செழியன், மற்றும் பொன்னமராவதி மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.