பொது இடங்களில் கோவிட் நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தகவல்

தமிழ்நாட்டில் கொரோனா(கோவிட்-19) நோய்த் தொற்றானது ஜனவரி மாதம் ஏற்பட்ட மூன்றாம் அலைக்குப் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், கோயம்புத்தூர், திருச்சி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக தொற்று அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 10 நபர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. இத்தொற்றானது மக்கள் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொது இடங்களில் கோவிட் நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும்.

மேலும் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தி கொள்ளாதவர்கள் உரிய நேரத்தில் தங்களது தவணைக்குரிய தடுப்பூசி செலுத்திக் கொண்டு நோயின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

92 − = 85