பொதுமக்கள் பயன்படுத்தும் குளம் கழிவுநீர் சாக்கடை சேமிப்பு கிடங்காக மாற்றிய அவலம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மிகவும் பிரசித்தி பெற்ற உடைய பிராட்டி பிடாரி அம்மன் கோவில் ஊரணியை சில நாட்களுக்கு முன்னதாக தூர்வாரி. தூய்மைப்படுத்தி, வர்ணங்கள் பூசி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு ஏதுவாக நகரத்தார்கள் ஊரணியை தூர்வாரி சுத்தம் செய்து கொடுத்த நிலையில். பொதுமக்கள் தொழிலாளிகள் குளிப்பதற்கு பயன்படுத்திய குளம் தற்போது அப்பகுதி கழிவுநீர் சேமிக்கும் சாக்கடைக்கிடங்காக மாறியுள்ளது.

நல்லது செய்த நகரத்தார்களும் அதை கழிவுநீர் சாக்கடை சேமிப்பு கிடங்காக மாற்றிய பேரூராட்சி நிர்வாகமும். என தொழிலாளிகளும் பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் வரலாற்று சிறப்புமிக்க ஊரணியை மீண்டும் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.