பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,932  சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது, இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சென்னையில் இருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 6,300 பேருந்துகளுடன் 4,449 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 10,749 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேற்கண்ட 3 நாட்களில் மட்டும் சிறப்பு பேருந்துகள் மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044 2474 9002, 044 2628 0445 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 3 =