பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பானுப்ரியா தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறையினருக்கு பொதுமக்கள் பாரட்டு

பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் புதுக்கோட்டை மாவட்ட நிலைய அலுவலர் பானுப்ரியா தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறையினருக்கு பொதுமக்கள் பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நவம்பர் 15ம் தேதி முதல் பெய்து வரும்  வடகிழக்கு பருவ கனமழை காரணமாக புதுக்கோட்டை நகரில் காமராஜபுரம், மேட்டுப்பட்டி, பசுமை நகர்,புதுவயல், இந்திரா நகர் மற்றும் அசோக் நகர் சுற்றியுள்ள குடியிருப்பில் வெள்ள நீர் அதிகமாக சூழ்ந்திருந்தது. மாவட்ட அலுவலர் இ. பானுப்ரியா தலைமையில் நிலையஅலுவலர் புதுக்கோட்டை மற்றும்  குழுவினர் வெள்ளம் சூழ்ந்திருந்த குடியிருப்பில் இருந்து மக்களை லைப் ஜாக்கெட் மூலமாக பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பெண்கள்,குழந்தைகள் என்று மொத்தமாக 194 பேரை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்ததுடன். மேட்டுப்பட்டி அருகே வீட்டில் விழுந்த மரத்தினை உடனே அகற்றி துரிதமாக செயல்பட்டனர்.ராஜகோபாலபுரம் அருகே  மழையினால் இடிந்த வீட்டுக்குள் இடர்பாடுகள் சிக்கிய 2 பேரை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.தீயணைப்பு துறையின் ஒலிபெருக்கியின் மூலமாக தாழ்வான பகுதியில் வசித்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை வெளியேற்றி  வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக விரைந்து பணிபுரிந்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 − = 40