அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பேரானூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவ யோக விநாயகர் ஆலய நூதன ராஜகோபுரம் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் தமிழ்நாடு காந்தி பேரவை நிறுவனர் முனைவர் வைர.ந.தினகரன் குடும்பத்தாரால் இந்த திருக்கோவில் கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சிவயோக விநாயகர் ஆலயத்தில் அருளாட்சி புரிந்து வரும் சிவயோக விநாயகர் மற்றும் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் கால பைரவர் கன்னிமூல கணபதி பதினெட்டாம்படி கருப்பர், ஸ்ரீயோக கன்னிகாம்பாள், ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர் துர்க்கை, பாலகணபதி பால முருகன் ஆகிய தெய்வங்களுக்கு திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி திருவருளால் கும்பாபிஷேக விழா நடைபெற்றது,
சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கலசங்களை யாகசாலையில் இருந்து தூக்கி புறப்பட்டு கோவிலை வலம் வந்து திருக்கோவிலின் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. க இவ்விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தகோடி பெருமக்கள் சமூக இடைவெளியிட்டு கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கட்டது. பக்ககோடி பெருமக்கள் சிவயோக விநாயகரின் திருவருளை பெற்ற மகிழ்வில் சிவநாமம் சொல்லி வழிபட்டு சென்றனர் விழாவினை சிவயோக சித்தர் பீடத்தினர் ஒருங்கிணைத்தனர்.
