பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பேரறிஞர்அண்ணா  பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது,  இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர்  ஷ்ரவன்குமார் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் நாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிபோட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து, கச்சிராப்பாளையம் வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும், 4 முதல் 10 இடங்கள் வரை பெறும் மாணவமாணவிகளுக்கு ரூபாய் 250 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், நாளை அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில்  வழங்கபடவுள்ளன. இன்று நடைபெற்ற இப்போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்டமாணவிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) வேல்முருகன்,மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 − = 52