பேனா சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தப்படுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்

பேனா நினைவுச்சின்னம் மெரினா கடலில் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தப்படுமென என்று சீமான் அறிவுப்பு.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பேனா சின்னத்திற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவீட்டர் பதிவில் கூறும்போது  கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது. “மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 31 = 38