பேக்கரி மஹராஜ் நிறுவனர் சீனு.சின்னப்பா முதலாம் ஆண்டு நினைவு பல்கலைத் திறன் போட்டிகளின் 5ம் நாள் நிகழ்வாக அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும் நிகழ்வானது இன்று புதுக்கோட்டையில் வெகு விமர்சையாக நடைப்பெறவுள்ளது.
புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனர் அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக பல்கலைத் திறன் போட்டிகள், யோகாசனப் போட்டி, இரத்ததான முகாம், சிலம்பம், கராத்தே போட்டிகள், கவியரங்கம், பரிசளிப்பு விழா என ஐந்து நாள் நிகழ்வின் துவக்க விழா சின்னப்பா நகரில் உள்ள மஹராஜ் மஹாலில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி புதன்கிழமை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

முதல்நாள் நிகழ்வை திருக்குறள் கழகத்தின் தலைவர் க.இராமையா துவங்கி வைத்தார், மாவட்ட வர்த்தக கழகத்தின் தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாந்தம் சவரிமுத்து, பொருளாளர் கதிரேசன், கிங் டவுன் ரோட்டரி சங்க தலைவர் விக்னேஷ், செயலாளர் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் தொல்பொருள் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், சத்தியராம் இராமுக் கண்ணு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புவனேஸ்வரி பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.
அபாகஸ், தமிழ், ஆங்கிலம் கையெழுத்துப் போட்டி, ஓவியம் என பல்கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது 750க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றோர்களோடு கலந்துகொண்டனர்.
ஏப்ரல்-27 வியாழன்; யோகாசனப் போட்டி
போட்டியினை எஸ்.வி.எஸ் ஹீரோ வின் நிர்வாக இயக்குனர் எஸ்.வி.எஸ். ஜெயகுமார் துவங்கி வைத்தார், ரோட்டரி மாவட்டம் 3000-தின் முன்னாள் துணை ஆளுநர்கள் கருணாகரன், பிரசாத், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார் மதியம் நடைபெற்ற கவிதைப் போட்டியினை மாமன்னர் கல்லூரியின் பொருளாதார துறை பேராசிரியர் கருப்பையா துவங்கிவைத்தார். நடுவர்களாக கவிஞர் மா.கண்ணதாசன், தமிழ் ஆசிரியர்கள் உதயகுமார் ஆனந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆத்மா யோகா மையத்தின் நிறுவனர் யோகா ரெ.பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.
யோகா மற்றும் கவிதைப் போட்டிகள் LKG, UKG, ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை, 4-ம் வகுப்பு முதல் 6- ஆம் வகுப்பு வரை, 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை 10 – முதல் 12-ம் வகுப்பு என 5- பிரிவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. 350க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி யோகா மற்றும் கவிதை ஒப்புவித்த மாணவ மாணவிகள் பெற்றோர்களோடு கலந்துகொண்டனர்.
ஏப்ரல்-28 வெள்ளி; இரத்ததான முகாம்
மூன்றாம் நாள் நிகழ்வாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. குருதிக் கூடு, ஜேசிஐ புதுக்கோட்டை சென்ட்ரல், ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி , ஆத்மா அகாடமி இணைந்து நடத்திய இம்முகாமினை புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையின் மேனாள் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் எட்வின், குழந்தைகள் நல மருத்துவர் ச.ராமதாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கி மருத்துவ அதிகாரி மருத்துவர் கிஷோர்குமார் தலைமையில் இரத்த வங்கி மருந்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக வாசகர் பேரவை செயலாளர் பேராசிரியர் சா.விஸ்வநாதன், நகர்மன்ற உறுப்பினர் சா.மூர்த்தி, மரம் நண்பர்கள் செயலாளர் பழ.கண்ணன்,ஜேசிஐ முன்னாள் மண்டலச் செயலாளர் இராம.லெட்சுமணன், ஆறுமுகம், குருதிக் கூடு இரத்த தான அமைப்பின் நிறுவனர்கள் சுப.முத்துப்பழம்பதி, உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம், ஜேசிஐ புதுக்கோட்டை சென்ட்ரல் தலைவர் கஜேந்திரன், செயலாளர் ரமேஷ், நேரு யுவகேந்திரா உதவி திட்ட அலுவளர் இரா.நமச்சிவாயம், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் சதாசிவம், கருணாகரன், முருகபாரதி, ஆத்மா அகாடமி நிறுவனர் யோகா ரெ.பாண்டியன், செயலாளர் புவனேஸ்வரி பாண்டியன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேக்கரி மஹராஜ் பணியாளர்கள் மற்றும் இரத்த கொடையாளர்கள் நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.

ஏப்ரல்-29 சனி; கராத்தே & சிலம்பம் போட்டிகள்
தலைமை விருந்தினராக ரோட்டரி மாவட்டம் – 3000தின் மேனாள் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம், சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்தின் உடல்கல்வி துறை தலைவர் ரமேஷ், சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், புதுக்கோட்டை மாவட்ட பார்கவுன்சில் பொருளாளர் சுரேஷ்குமா, கவிஞர் பீர்முகமது, புத்தாஸ் பெற்றோர் பயிற்சியாளர் கழக தலைவர் அஸ்வின்குமார் ஆகியோர் துவக்கிவைத்தனர். சமூக சேவகர் காடுவெட்டியார் குமார், மருந்துவர் சிவபிரகாஷ் ஆகியோர் சிறப்ப விருந்தினர்களாக கலந்துகொண்டனர். புத்தாஸ் வீரக்கலை கழகத்தின் நிறுவனர் சேது. கார்த்திகேயன், மாஸ்டர் சண்முகம், ஆத்மா அகாடமி நிறுவனர் யோகா ரெ.பாண்டியன், செயலாளர் புவனேஸ்வரி பாண்டியன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி ஆசிரியர்கள், நடுவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட 320 மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர்.
ஏப்ரல்-30 இன்று ; அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும்
அள்ளிக் கொடுத்து வாழ்ந்த நெஞ்சம். ஆனந்தப் பூந்தோப்பாய் மலர்ந்த நெஞ்சம் அறமனச் செம்மல் ‘சீனு. சின்னப்பா அவர்கள் பெருங்கொண்டான் விடுதி தோப்பில் பேரமைதியில் துயில் கொண்டு ஓராண்டு நிறைவடைகிறது. முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் ஆத்மா யோகா நிறுவனர்கள் யோகா ரெ. பாண்டியன், யோகா புவனேஸ்வரி பாண்டியன் ஒருங்கிணைப்பில் பல்கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. ரத்ததான முகாமும் நடைபெற்றது. போட்டிகளின் நிறைவு நாள் 30.04.2023 அன்று பரிசளிப்பு நிகழ்வும் மாபெரும் கவியரங்கமும் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் உள்ள மஹராஜ் மஹாலில் ‘அறமனச்செம்மலும் 60 கவிஞர்களும்’ எனும் தலைப்பில் 60 கவிஞர்களின் கவிதை அணிவகுப்பு நடைபெற உள்ளது. கவிஞர்கள் ‘சிந்தை நிறைந்த சீனு சின்னப்பா’ என்ற தலைப்பிலோ அல்லது உழைப்பாளர் தினத்தைக் குறிக்கும் வகையில் ‘அனுதினமும் மே தினமே’ எனும் தலைப்பிலோ கவிதை படைப்பார்கள். காலை 10 மணிக்குத் தொடங்கி 12 மணிக்கு நிறைவடையும்.

கவிஞர்களின் சங்கமம் நடைபெறுகிற மஹராஜ் மகாலுக்கு தாங்களும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து ‘அறமனச் செம்மல்’ சீனு. சின்னப்பா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கேட்டுக்கொள்கிறோம். என விழாக் குழுவின் சார்பாக கவிஞர் தங்கமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். கவிஞர்கள் சங்கமத்தை கவிச்சுடர் கவிதை பித்தன், கவிஞர் நா. முத்து நிலவன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். வழக்கம்போல் இன்றைய நிகழ்விலும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னர் ஆண்ட மகத்துவம் நிறைந்த புதுக்கோட்டை மண்ணில் இதுவரையில் இவ்வளவு பெரிய ஒரு விழாவை எந்த மாமனிதருக்கும் ஐந்து நாள் பொது நிகழ்வு நடத்தி ஆயிரக்கணக்கானோரை பங்கேற்க வைத்து அவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ற போட்டிகளை நடத்தி அதில் இருந்து சுமார் 500 வெற்றியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய நிகழ்வு புதுக்கோட்டை மண்ணில் இதுவே முதல் நிகழ்வு ஆகும்.
மே-01 நாளை; உழைத்தவரின் தினம்
உழைப்பாளர் தினத்தை உழைத்தவரின் தினமாக்கிய அறமனச் செம்மலுக்கு அவரது நினைவிடத்தில் நாளை மே 1ஆம் தேதி திங்கள்கிழமை. சமாதி வழிபாடு, நினைவேந்தல், புகழ் அஞ்சலி, ஜோதி வழிபாடு நிகழ்வானது காலை 7 மணியிலிருந்து நடைபெற இருக்கின்றது. இயற்கையை நேசித்து இயற்கையாகவே வாழ்ந்து மறைந்த சின்னப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி பசுமைக்கு அஸ்திவாரம் போடும் மகத்தான பணியும் நடைபெற இருக்கின்றது.
