பெற்றோர்கள் ஒரு மணிநேரமாவது குழந்தைகளிடம் பேசுங்கள்: ஈரோடு மகளிர் இன்ஸ்பெக்டர் அறிவுரை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கிப் பேச வேண்டும் என்று ஈரோடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலாதேவி அறிவுரை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அடுத்து அக்ரஹாரம் செல்லும் வழியில் அமைந்துள்ள கிறிஸ்து ஜோதி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில்  விளையாட்டு தின விழா நடைபெற்றது.

விழாவில், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலாதேவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பள்ளி மாணவிகளுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பது போல பள்ளி மாணவிகளை பாதுகாக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கிப் பேச வேண்டும் என்றும் நிர்மலாதேவி அறிவுரை வழங்கினார்.

மேலும், பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறு விதமான போட்டிகள் நடத்திய பள்ளி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

65 − 58 =