புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் அனைவரும் சமத்துவ விழா கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சுப்பையா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரசில்லா ஏற்பாட்டின் பேரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி மைதானத்தில் பெரிய பானைகளில் பொங்கல் வைத்தும் செங்கரும்பு நட்டு தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.இந்த விழாவில் அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பாரம்பரிய உடையான பட்டுவேட்டி,

பட்டுசேலை உள்ளிட்ட உடைகளை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர் மேலும் பள்ளி வளாகம் முழுவதும் அலங்காரங்கள் செய்துசாதி மத பேதமின்றி சமத்துவ பொங்கல் விழா திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வாழை இலையில் இனிப்புபொங்கலை ஆசிரியர்கள் பறிமாறினர் பின்னர் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் குழந்தைகளாக மாறி கும்மிபாட்டுக்கு நடனம் ஆடியது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மாணவர்கள் ஆசிரியர்களின் கும்மி பாட்டு நடனத்திற்கு கைதட்டி உற்சாகப்படுத்தினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பொங்கலோ பொங்கல் என்று கூறி வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.அரசு பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவர்களோடு ஆசிரியர்களும் இணைந்து நடனமாடிய விழா நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் கிராம நிர்வாக அலுவலர் ரெத்தினக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுப்பையா, மேலாண்மை குழு தலைவர் சிவசுப்பிரமணியன், வளர்ச்சி குழு தலைவர் ராஜீவ்காந்தி, மேலாண்மை குழு உறுப்பினர் வீரபாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
