அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள கம்மங்காடு மேலப்பட்டியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் தமிழழகன்(21), இவர் பெருங்களூர் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன்னர் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது ஏறியதில் தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளார்.
அந்த வழியாக சென்றவர்கள் ஆதனக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் தொடர்பாக ஆதனக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை வலை வீசி தேடி வருகின்றனர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.