பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : சட்டசபையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்ட  அறிவிப்பில் கூறியதாவது:- இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். 95 வயது வரை போராடியவர் பெரியார். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும்.

யாரும் எழுத தயங்கியதை எழுதியவர்; யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது. சாதிய ஏற்றுத்தாழ்வுகளை உதறித் தள்ளுவோம், பெண்களுக்கு சம உரிமை வழங்குவோம்.

பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி, ஆண்டு தோறும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என தெரிவித்தார்.