பெரியபுராணம் போன்ற கருத்தாங்குகளை அதிக அளவில் நடத்த வேண்டும் என தஞ்சையில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெகதீசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையம் மெய்யில் துறை, புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதினம் ஆகியவை சார்பில் இரண்டுநாட்கள் கருத்தரங்கம் மற்றும் பெரியபுராண ஆய்வுரைக்களஞ்சியம் நூல் வெளியீடு விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன். பெரியபுராணம் தொடர்பான இது போன்ற கருத்தாங்குகளை அதிக அளவில் நடத்தவேண்டும். கருத்தரங்குகள் அதிகம் நடைபெற்றால் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவர வாய்ப்பு உள்ளது. மக்கள் தங்களது பிறப்பின் உண்மை நிலையை உணரமுடியும்.பெரியபுராணம் காட்டும் வாழ்வியலை முழுவதும் ஆய்வு செய்துவிட முடியாது. ஒவ்வொரு அடிகளாரின் வாழ்வும், வாழ்ந்த இடமும், அவர்கள் வழிபட்ட கோயில்களும் கோயிலுக்குள் இருக்கும் தெய்வங்களும், அத்தெய்வங்களின் அருளையும் உணரமுடியும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவனடியார்களுக்கு சேவை செய்வதில் அடியார்கள் சிறந்தவர்களா? அல்லது அவர்களது துணைவிமார்கள் சிறந்தவர்களா என்றெல்லாம் கருத்தாய்வுகள் தேவை.
பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வியல் இப்போது இயலுமா?, கணவன் – மனைவி இணைப்பு அன்று போல இப்போது உள்ளதா? உள்ளிட்ட கேள்விகளுக்கு இதுபோன்ற கருத்தரங்குகளில்தான், கற்றறிந்த தமிழறிஞர்கள் மூலம் விடை காணமுடியும். எனவே, இதுபோன்ற கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்தி கருத்தாகமிக்க கட்டுரைகள் வெளிவருவதற்கு மூலக்காரணமாக இருக்க வேண்டும். இக்கட்டுரைகள் புத்தக வடிவில் மக்களிடையே உலா வர வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் தலைவர் பாலமுருகனடிமை சுவாமிகள் ஆசி வழங்கினார். முன்னாள் நீதிபதி வெளியிட்ட பெரியபுராண ஆய்வுரைக் களஞ்சிய நூலின் முதல் படியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெற்றுக்கொண்டார். நிறைவுவிழாவில் மயிலம் பொம்மர் ஆதிமை தவப்பெருந்திரு சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் திலகவதியார் திருவருள் ஆதின சன்னதிதானம் தயானந்த சந்திரசேசுர சுவாமிகள், ஆகியோர் ஆசியுறை வழங்கினர். விழாவில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் க.திலகவதி, புதுக்கோட்டை வைரம் கல்விக்குழுமத்தாளாளர் தேனாள் ரகுபதி சுப்பிரமணியன், பொன்மாரி கல்விக் குழுமத் தலைவர் எஸ். ராமதாஸ், பேராசிரியர் ச.விஸ்வநாதன், வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் தாளாளர், கவிஞர் சுஆஏ .கதிரேசன், முனைவர் மு. பா, செல்வராஜ், முன்னாள் ரோட்டரி ஆளுநர்அ.லெ. சொக்கலிங்கம், கவிஞர் நிலவை பழனியப்பன், ந. புண்ணியமூர்த்தி, கவிஞர்சுப்பிரமணியன், பொறியாளர் கண்ணன், வேதரெத்திரனம் மற்றும் செந்தில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பதிவாளர் (பொ) சி. தியாகராஜன் வரவேற்றார். நிறைவாக கருத்தரங்க மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் சத்தியராம் மு. இராமுக்கண்ணு நன்றி கூறினார்.