பெரியபாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்: அலுவலகம் வெறிச்!

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். பெரிய ஊராட்சிகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்றும், நேற்றும் இரண்டு நாட்கள் சிறு விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும்  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் எல்லாபுரம் வட்ட தலைவர் காந்தாராவ், செயலாளர் வசந்த் குமார், பொருளாளர் சரவணன், துணைத் தலைவர் சற்குணம், துணைச் செயலாளர் அமுதவல்லி, மாவட்ட இணை செயலாளர் பொன்னரசு, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பணியாளர்களில் ஏராளமானோர் இன்றும் 2வது நாளாக சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பணியாளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஊரக வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − 21 =