பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்த பணிகளை நவம்பர் 1-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1-ம் தேதி அன்று தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அன்றில் இருந்து நவம்பர் 30ஆம் தேதி வரை வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யவோ அல்லது பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் டிசம்பர் 20-ம் தேதி ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி எனப்படும் செல்போன் செயலி போன்றவற்றின் மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.