புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆ.

வெங்கடேஸ்வரி, ந.நரசிம்மன் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கு பிரகாஷ் ஆகியோரிகளின் ஆலோசனையின் படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை ஒன்றியம் பெத்தாரிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தன்னார்வலர் ரேகா வரவேற்றார். இவ்விழாவில் கலந்து கொண்ட இல் தேடி கல்வி மைய கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா
பேசியதாவது மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மேலும் கொரனோ கால கற்றல் இழப்புகளை சரி செய்வதற்கு தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் கிராமப்புற மாணவர்களுக்கு கற்றல் இழப்புகளை சரி செய்யக்கூடிய சிறப்பான பணியை செய்து வருகிறது.
மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை மேம்படுத்தி வருகிறது என்றும், மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கற்றல் பயிற்சி அளிக்க கூடிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்று பேசினார். புகையில்லா போகியை பண்டிகை கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. நிகழ்வுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தன்னார்வலர்களுக்கு மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பொங்கல் உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் முத்து ஜெயா, புவனேஸ்வரி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.