
திண்டுக்கல்லில் விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் சார்பாக டெல்லியில் பெண் காவலர் சபியா சைஃபியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் காவலராக பணிபுரிந்த சபியா சைஃபி என்ற பெண் காவலரை சில மர்ம நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தனர் இச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் சிறுமிகள் தங்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு தங்களது கண்டனத்தை வெளிகாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட குழு உறுப்பினர் சபுராம்மாள் தலைமை தாங்கினார். நகர குழு உறுப்பினர் ஐசம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் லத்தீப். தொகுதி தலைவர் ஷேக் அப்துல்லா மாவட்ட செயலாளர் அப்துல் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலச் செயலாளர் பாத்திமா கனி கண்டன உரையாற்றினார் இறுதியாக நகர குழு உறுப்பினர் ரஹ்மத் நிஷா நன்றியுரை ஆற்றினார்.
