ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் அடையாளங்களை ராணுவம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த வீரர்கள் ஹவில்தார் மன்தீப் சிங், லேன்ஸ் நாயக் தெபாசிஷ் பஸ்வால், லேன்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிப்பாய் ஹர்கிருஷ்ணன் சிங், சிப்பாய் சேவாக் சிங் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. இவர்கள் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ் படைப் பிரிவின் 16வது கார்ப்பைச் சேர்ந்தவர்களாவர். நக்ரோடாவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று இவர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சையில் உள்ளார். வீரர்களின் மறைவுக்கு ராணுவத்தினர், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இந்திய ராணுவத்தில் 16வது கார்ப்ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான ஒயிட்நைட் கார்ப்ஸில், “உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம். அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் தோளாடு தோளாடு நிற்கிறோம் ” என்று தெரிவித்துள்ளது.