புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் கிராமத்தில் தேசிய விவசாய தின வேளாண் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் 75 நாட்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறுவதற்கான கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு வேளாண் இயக்குனர் பழனியப்பா தலைமை வகித்தார். சித்தன்னவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய கட்டுப்பாடு ஆய்வகம் குடுமியான்மலை, வேளாண் அலுவலர் அபிநாயா, சித்தன்னவாசல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் அபிநயா, பிரதம மந்திரியின் கெளரவ நிதித்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் தவனண விவரங்களை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் உதவிபேராசிரியர் வேளாண் விரிவாக்கத் துறை பிரபுரத்தினம் மற்றும் உதவிபேராசிரியர். கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆயிஷா சித்திக்கா, கல்லூரி மாணவிகள் கீர்த்திகா, மேகா, ஜாய்பிரியங்கா, மோட்லிஜானி, நித்தியா, பவதாரணி, ரஞ்சனி, ஸ்ரீகலாஇஸ்டெல்லா, தமிழினிகா உள்ளிட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.