புளியங்குடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தி.மு.க., நகரச் செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் புளியங்குடி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் கிராம நிர்வாக அலுவலகங்களில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் உதவித்தொகை பெற சிறப்பு முகாம் நடந்தது.

முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்க்கன்னி உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை,  திருமண உதவித் தொகை,  இயற்கை மரணம், விபத்து மரண உதவித் தொகை, மற்றும் நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை, பெறுவதற்குரிய சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில், நலத்திட்ட உதவித் தொகை பெற விரும்பும் மக்கள், கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், அருணா தேவி, கார்த்திக், வள்ளி அண்ணாமலை, வீரமணி, ராஜேஸ்வரி, தவமணி, ஆறுமுகம், சுப்பு, கணேசன், பேச்சிமுத்து, கருப்பையா, பொன்னுதுரைச்சி, சக்தி ஐயப்பன், மணிமாறன், ராஜ் மீனா, பழனி, திரவியம், வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து வார்டில் உள்ள மக்களையும் முதல்வரின் உதவித்தொகை பெற அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 1