புளியங்குடியில் வீடு இழந்த பெண்ணுக்கு நிவாரணம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வடகிழக்கு பருவ மழை காரணமாக இந்திரா நகர் காலனியில் திலகா என்ற பெண்மணியின் வீடு எதிர்பாராத நிலையில் இடிந்து விழுந்தது.

தகவலறிந்த புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் வழங்கினார். பாதிக்கப்பட்டப் பெண் திலகா குடிசை மாற்று வாரியத் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டித்தர ஏற்பாடு செய்து தருமாறு நகர்மன்றத் தலைவரிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகர்மன்ற உறுப்பினர் பீர்பாத் சாகுல் ஹமீது உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =