புளியங்குடியில் சாலை விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலை விழிப்புணர்வு மற்றும் சாலை பராமரிப்பு பேரணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமை நடந்தது.

புளியங்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் விவேகானந்தன் பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கம் முன்னிலை வகித்தனர். புளியங்குடி பெருந்தலைவர் காமராஜர் சிலையிலிருந்து புளியங்குடி பேருந்து நிலையம் வரை நடந்த ஊர்வலத்தில் விழிப்புணர்வு வாசக பாதகைகளை ஏந்தி வந்தனர்.

தலைக்கவசம் உயிர்க்கவசம், ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு இதுவே உனது உயிர்காப்பு, சாலையில் அலைபேசி ஆபத்தாகும். நீ யோசி, போதையில் பயணம் பாதையில் மரணம், படியில் பயணம் நொடியில் மரணம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடு, மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பாதே போன்ற வாசகங்களை கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

பேரணியில் உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சரவணகுமார், மாரியப்பன், மனோகரன், பாண்டியன் மற்றும் அனைத்து ஆசிரியகள், அனைத்து அலுவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

65 − 57 =