தென்காசி மாவட்டம், புளியங்குடியில் 31-வது வார்டில் மிகவும் ஆபத்தான நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை மாற்று இடத்தில் அமைத்து தர வேண்டி புளியங்குடி மின்சாரத்துறை அலுவலகம் முன்பாக பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் கம்பமானது அரசு மருத்துவமனை அருகில் உள்ள நிலையில், அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ், ஆட்டோ கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து தர ரூபாய் 20 ஆயிரம் கேட்ட அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
24-11-2022 ஆம் தேதியில் முதுநிலை பொறியாளர், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கும் மனுக்கள் மூலம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நகரத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், கடையநல்லூர் ஒன்றிய தலைவர் தருமர், மாவட்ட பொருளாளர் பாலகுருநாதன், பாலகிருஷ்ணன், மகளிர் அணி பிரிவு மகாலட்சுமி, ஆன்மீக பிரிவு ராதாகிருஷ்ணன், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.