புதுவை அரசு காரைக்காலில் சர்வதேச கடற்கரை தூய்மை தினம்

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு  காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் புவி அறிவியல் அமைச்சகம் மேலும் இந்திய கடலோர காவல் படை இனைந்து இன்று காலை 8.00 மணியளவில் காரைக்கால் கடற்கரை மற்றும் கிளிஞ்சல் மேடு கடற்கரை பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில்  காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலோர காவல் படை மேலும் என் சி சி மற்றும் என் எஸ் எஸ். காரைக்கால் நகராட்சி நிர்வாகம். காவல்துறை, ஒ.என்.ஜி.சி. உள்ளிட்ட துறைகள் இன்று நடைபெற்ற தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இந்த தூய்மை பணியில் மாநிலங்களவை உறுப்பினர்  செல்வகணபதி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர், கடலோர காவல் படை கமாண்டிங் அதிகாரி விஸ்வநாதன், மற்றும்  இராமநாதன்  மேலும் துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் ,காவல்துறை கண்காணிப்பாளர் (தெற்கு) திரு சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாணவச் செல்வங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். காரைக்கால் கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தும் நிகழ்வு நடைபெற்ற நிலையில் கிளிஞ்சல் மேட்டிலும் இப்பணி நடைபெற்றது. இப்பணியில் மீன பஞ்சாயத்தார்கள், மற்றும் மீனவர்கள் சுத்தம் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 − 47 =