புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கேண்டீனுக்கு சீல்- அதிகாரிகள் அதிரடி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கேண்டீனில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 8,000-க்கும் அதிகமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர், இந்த மருத்துவமனையில் பல்வேறு உணவகங்கள் உள்ளன, அவை தனியாரிடம் ஒப்பந்தத்திற்கு விடப்பட்டு இயங்கி வருகின்றன,இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவு அருகே இயங்கிவரும் உணவகத்தில் கடந்த சில மாதங்களாக நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதாக தொடர் புகார் எழுந்துள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரிடம் இருந்தும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தன.

இதையடுத்து, இன்று மதியம் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர், ஆய்வில் தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது உறுதியானதை அடுத்து கேண்டீனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 + = 52