புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 26 ஆம் ஆண்டு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 26 ஆம் ஆண்டு ஆண்டு விழா வழக்கமான உற்சாகத்துடன் வெகு விமர்சையாக நாளை மறுநாள் நடைபெற இருக்கின்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள விஜய் பேலஸ் மஹாலில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெறும் இந்த விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா தலைமை வைக்கிறார். விஜய் குழுமங்களின் தலைவர் வி.முருகானந்தம் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக தமிழறிஞர் நகைச்சுவை பேச்சாளர் கு. ஞானசம்பந்தன், புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நிகழ்வில் மனதை வருடும் இசை நிகழ்ச்சி மக்கள் இசை பாடகர்களான செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் கலை நிகழ்ச்சி மாணவர்களின் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை ஒரு கலைத் திருவிழாவை போல் நடைபெற இருக்கின்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3