புதுக்கோட்டை  ஸ்ரீ வரதராஜ பெருமாள்  கோவிலில் வைகுண்டஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

புதுக்கோட்டை  ஸ்ரீ வரதராஜ பெருமாள்  கோவிலில் வைகுண்டஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

புதுக்கோட்டையில் கீழ 3  ஆம் வீதி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்டஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு வெகு  சிறப்பாக   நடைபெற்றது.அதிகாலை 5.மணிக்கு சொர்க்கவாசல்திறக்கப்பட்டு உற்சவர்   ஸ்ரீ வரதராஜ பெருமாள்   சொர்க்கவாசல்  வழியாக பிரவேசித்தார்

 பின்னர்  ஸ்ரீ வரதராஜ பெருமாள்கோவிலை வலம்  வந்து   வசந்த மண்டபத்தில்  பக்தர்களுக்கு   அருள் பாலித்தார் ஆலயத்தில் மூலவர்   ஸ்ரீ வரதராஜ பெருமாள்  சுவாமிக்கு  பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை   நடைபெற்றது.


மலர்  அலங்காரத்தில் உற்சவர்   வரதராஜ பெருமாள் , ஆண்டாள்    தேவி பூதேவி   பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சந்நிதியில்  சுற்று பிரகாரத்தின்    உள்ள  அலமேலுமங்கை சக்கரத்தாழ்வார் மலர்  அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
திரளான பக்தர்கள் அதிகாலையிலிருந்து  நீண்ட வரிசையில் காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை  பாலாஜி முன்னிலையில் திருக்கோவில் நிர்வாகிகள் ,   செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − 48 =