புதுக்கோட்டை மேல ராஜ வீதிலுள்ள ஸ்ரீ நைனாராஜு தெண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ நைனாராஜு தெண்டாயுதபாணி தெண்டாயுதபாணி கோவிலில் மார்கழி மாதம் மற்றும் வருட நிறைவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது ஸ்ரீ நைனாராஜு தெண்டாயுதபாணி சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .இதில், அந்தப் பகுதியிலுள்ள பக்தர்கள் திரளாக வந்திருந்து வழிபட்டனர் அனைவர்க்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது .ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் உபயதாரர்கள் சுந்தர் ,கலைச்செல்வி நிர்வாகிகள் செய்திருந்தனர்.