புதுக்கோட்டை, வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடத்தினர். இதில் மாணவர்கள் ஆங்கில மொழியினை கற்பதாலும் பேசுவதாலும் ஏற்படும் நன்மைகளை வலியுறுத்தினர்.
நடைமுறை வாழ்க்கைக்கு ஆங்கில மொழியின் அவசியத்தையும் அதன் தேவையையும் உணர்த்தும் வகையில் கைப்பதாகிகளை ஏந்தியவாறு பள்ளி முழுவதும் வலம் வந்தனர். மேலும் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவோம் என்ற உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.