புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான உளவியல் கலந்தாய்வு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்களுக்கான “சேர்ந்தே உயர்த்துவோம்” என்ற உளவியல் ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் பள்ளியின் உளவியல் ஆலோசகர் மார்ட்டின் நடத்திய குழந்தைகளின் வெற்றிக்கு பள்ளியோடு துணை நிற்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் குழந்தைகளின் வளர்ச்சி நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டது, பிள்ளைகள் எதிர்காலம் குறித்தான திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பிள்ளைகளின் எதிர்கால கனவுகளுக்கு தேவையான மதிப்பெண்களை பெறவைப்பதில் பெற்றோர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது பற்றி எடுத்துக் கூறப்பட்டது, மாணவர்கள் உடல் நலம் மற்றும் மனநலத்தில் எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களாக மாறுவதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகள் தொகுத்து வழங்கப்பட்டது, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் தொகுக்கப்பட்ட குறிப்பேடு அனைத்து பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழாசிரியர் கணியன் செல்வராஜ், காசாவயல் கண்ணன், ஆசிரியர் சபரிநாதன், ஒருங்கிணைப்பாளர் கௌரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

45 − = 36