புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்

புதுக்கோட்டை,  கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில்  பிர்லா குழுமத்தின் அவ் டெக் நிறுவனத்தின் வளாக நேர்காணல் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கல்லூரியின் தலைவர் ஆர்.ஏ.குமாரசாமி தலைமை வகித்தார்.  செயலாளர் பி.கருப்பையா முன்னிலை வகித்தார். முதல்வர் ஆர்.ஜீவானந்தம், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் எம்.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  அவ் டெக் நிறுவனத்தின் ஹெச்.ஆர்.மேனேஜர் ஆர்.கோபி நிறுவனத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து பின் மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தினார். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மெகட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் துறையை சார்ந்த 91 மாணவர்கள் நேர்காணலில் கலந்துகொண்டனர்.  அவர்களில் 24 மாணவர்கள் நேர்காணலில் வெற்றி பெற்று பணி  நியமன  ஆணைகளை  பெற்றனர். முன்னதாக வேலைவாய்ப்பு அலுவலர் திருமலையரசன் அனைவரையும் வரவேற்றார். உதவி அலுவலர் பிரபுதாசன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 9 =