
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்திலேயே முதன் முறையாக உளவியல் ஆலோசனைக்கென்று தனி ஆசிரியரை நியமித்ததோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து மனநல மேம்பாட்டு பயிற்சி வழங்கி வரும் பள்ளியாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி மற்றும் மனநல மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை தாங்கினார், இந்நிகழ்வில் மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மாணவர்களிடம் தேர்வுகளை எதிர்க்கொள்ளும் முறை பற்றியும் தற்போதுள்ள காலச்சூழலில் சமூக வலைதளங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மனச்சிக்கல்களை தீர்ப்பது குறித்தும் கலந்துரையாடினார்.
மனநலம் சார்ந்த மாணவர்களின் பல கேள்விகளுக்கு மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தெளிவான விளக்கம் அளித்தார். மாணவர்களுக்கு எளிதான பல பயிற்சிகள் வழங்கப்பட்டன, மாணவர்கள் உற்சாகமாக பயிற்சியில் பங்கேற்றனர், இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் கணியன் செல்வராஜ் வரவேற்க,துணைமுதல்வர் குமாரவேல் நன்றி கூறினார்.