புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி யாழினி மாவட்டஅளவில் ஆய்வுக்கட்டுரைபோட்டியில் மூன்றாம் பரிசுபெற்றுபள்ளிக்குப் பெருமைசேர்த்துள்ளார். தனியார் பள்ளிகளின் மாவட்டகல்விஅலுவலர் மாணவர்களின் திறன்களைவெளிக்கொணரும் வகையில் பல்வேறுபோட்டிகளைநடத்திபரிசுகள் வழங்கிவருகிறார்.
அந்தவகையில்மாவட்டஅளவில் ஒன்பதாம் வகுப்புபடிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பியதலைப்புகளில் 100 பக்கம் ஆய்வுகட்டுரைஎழுதும் போட்டியைஅறிவித்தார். 500க்கும் மேற்பட்டமாணவர்கள் கலந்துகொண்டபோட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக்மேல்நிலைப்பள்ளிமாணவி ரா.யாழினி “கல்விஅன்றும் இன்றும்”என்றதலைப்பில் எழுதிய ஆய்வுகட்டுரைக்கு மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார்.
மாவட்டஅளவில் ஆய்வுக் கட்டுரையில் மூன்றாம் இடம் பெற்றுபள்ளிக்குவந்தமாணவி யாழினியைபள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி பரிசுகள் வழங்கிபாராட்டினார். பள்ளியிலிருந்துபங்குபெற்றமேலும் 10 மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பள்ளிமுதல்வர் பரிசுகளாகவழங்கிபாராட்டினார்.
இந்தநிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியபெருமக்கள் பரிசுபெற்றமாணவிக்குபாராட்டுக்களைதெரிவித்தனர். மாணவி ரா. யாழினியின் பெற்றோருக்கும் பொன்னாடைஅணிவித்துவாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.