புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில்  மாணவர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய  பரிசுத் திருவிழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவுத் திறனை, ஆங்கில அறிவை வெளிக்கொணரும்  வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் பல்வேறு பள்ளிகளின்

கல்லூரிகளின் ஆங்கில ஆசிரியர்கள் நடுவர்களாக பொறுப்பேற்று குழந்தைகளின் அறிவாற்றலை கண்டும் கேட்டும் நல்ல தீர்ப்புகள் வழங்கினர்.

அதன் தொடர்ச்சியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது, விழாவில் பல லட்சம் செலவில் பரிசு பொருட்கள் விலை

மதிக்க முடியாத சான்றிதழ்கள் கழுத்து வலிக்கும் அளவு வெயிட்டான மெடல்கள் என 1500 பரிசுகள்

மாணவர்களுக்கு வழங்கப்பட்டன, சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு “ஆசிரியர் மனசுத்

திட்டம்” மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, செங்கலும் சிமெண்டும் சேர்ந்து அமைந்ததெல்லாம் பள்ளிக்கூடங்கள் இல்லை, எல்லா வகையிலும் மாணவர்களின் முன்னேற்றத்தை  மட்டுமே யோசிக்கின்ற இந்தப் பள்ளியே தரமான பள்ளி என்று பேசினார்.

விழாவில் பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, பள்ளியின் செயல் அலுவலர்

காவியா மூர்த்தி, பல்வேறு ரோட்டரி அமைப்புகளைச் சேர்ந்த வேங்கட சுப்பிரமணியன்,

சிவகுமார், மாருதி. கே. மோகன்ராஜ், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், வி.

ராஜேந்திரன், ஜே. ரமேஷ்பாபு,  மகாத்மா ரவிச்சந்திரன், என். வேலுசாமி, விஎன்எஸ்.

செந்தில், பேராசிரியர் கருப்பையா, பள்ளியின் உளவியல் ஆலோசகர் மார்ட்டீன்

ஆசிர்வாதம் மற்றும் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி வரவேற்க நிறைவாக பள்ளியின் துணைமுதல்வர்

குமாரவேல் நன்றி கூறினார், விழாவினை ஆசிரியர்கள் ஆனந்தி. காசாவயல் கண்ணன் ஆகியோர்

தொகுத்து வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

62 − 59 =