புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியும் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சமத்துவப் பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் செயலாளர் பி.கருப்பையா தலைமை தாங்கினார், முதல்வர் இளங்கோவன் வரவேற்புரையாற்றினார், கல்லூரியின் பொருளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் வாழ்த்துரை வழங்கினார், அனைத்து
பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பொங்கல் விழாவின் சிறப்பாக மாணவ, மாணவிகளுக்கு கோலப்போட்டி, பானைஉடைக்கும் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து
அனைவருக்கும் வழங்கினர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன, உதவிப்பேராசிரியர் திருவள்ளுவன் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.