புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் ட்ராக் அமைக்க வாய்ப்பில்லை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திட்டவட்டம்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் ட்ராக் அமைக்க தற்போது வாய்ப்பில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் 8,9, ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்: செப்டம்பர் 8,9 ஆகிய இரண்டு தேதிகளில் 8 வயது முதல் 20 வயதுக்குட்பட்டோர் அனைத்து பிரிவிலும் பங்கேற்கும் வகையிலான தடகளப்போட்டி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் ஒன்றிய அரசின் சிந்தடிக் டிரக் அமைக்க தற்போது வாய்ப்பு குறைவாக இருக்கின்றது. ஏனென்றால் காட்டுப் புது குளத்தின் சரி பாதி தான் மாவட்ட விளையாட்டு மைதானம். மழை காலங்களில் மாவட்ட விளையாட்டு மைதானம் முற்றிலுமாக மூழ்கி விடுவதை தொடர்ந்து பார்த்து வருகின்றோம். அப்படி இருக்கையில் சிந்தடிக் ட்ராக் அமைத்தால் அது வீணாகிவிடும். ஆகையால் மைதானத்தின் உயரத்தை மணல் கொண்டு அடித்து உயர்த்திய பிறகு அத்திட்டத்தை தொடங்கினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் இது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவை பாரதம் என்று பெயர் மாற்றும் முயற்சிக்கு அவர்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரத்தின் அடிப்படையில் செய்து வருகின்றனர். தற்போது கூட ஆங்கிலத்தில் இருக்க கூடிய குற்றவியல் சட்டப் பெயர்களை கூட இந்தியில் மாற்றக்கூடிய சூழ்நிலையை பார்த்து வருகிறோம். அனையபோர ஜோதி பிரகாசமாக எரிந்து வருகிறது பார்த்துக் கொள்வோம். இந்தியா என்றால் கொத்தடிமை என்ற பெயர் எந்த அகராதியில் உள்ளது. எதை வைத்து அவர்கள் இந்தியா என்பது கொத்தடிமை என்று கூறுகிறார்கள். எந்த காலத்தில் எதிலிருந்து அவர்கள் கூறுகிறார்கள். இந்தியா என்பது பிரிட்டிஷ் கொடுப்பதற்கு முன்னாள் சிந்து நதிக்கு இந்த பக்கம் இருப்பவர்களை இந்தியர்கள் என்று கூறினார்கள். நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை எதெல்லாம் செய்ய வேண்டுமோ எங்கள் சார்பாக அவர்களே எங்களுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது எங்களுக்கு அது மகிழ்ச்சி தான்.

முதலில் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஒரே நாடு ஒரே சுடுகாடு என்று வரட்டும் பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசலாம் உதயநிதி தலைக்கு 10 கோடி என்று ஒரு சாமியார் அறிவித்ததற்கு அதற்கு உதயநிதி தனது தலையை சீவ பத்து ரூபாய் சீப்பே போதும் என்று பதில் கூறியுள்ளார். சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு விமர்சனங்கள் வேறு மாறியாக வரட்டும். விமர்சனம் தான் உரையாடலை உருவாக்கும். ஒரு உரையாடல் தான் சிந்தனையை பலமாக்கும். வடமாநிலங்களில் உரையாடல் வரட்டும் அவர்களும் சிந்திக்கட்டும் எது நல்லது என்று நினைக்கிறார்களோ அந்த முடிவுக்கு அவர்கள் வரட்டும். வட மாநிலத்தில் உரையாடலே இல்லாமல் இருந்தது அப்போது உதயநிதி குறித்து ஒரு உரையாடல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் யோசித்ததை போல் அவர்களும் யோசிப்பார்கள்.

சனாதனம் குறித்து திட்டமிட்டு சர்ச்சையை உதயநிதி உருவாக்கவில்லை. திட்டமிட்டு சொல்வது என்றால் திடீரென்று ஒரு கருத்தை கூறுவது தான் ஆனால் இந்த கருத்தை 100 ஆண்டுகளாக திராவிட இயக்கம் இந்த கருத்தை தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டம் நூறாண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது திடீரென்று எல்லாம் பேசவில்லை. எப்போதும் பேசுவதை தான் நாங்கள் பேசி வருகிறோம் தற்போது தான் அவர்களுக்கு தெரிகிறது நாங்கள் திட்டமிட்டு எல்லாம் பேசவில்லை. என்றார்.