புதுக்கோட்டை வருவாய் மாவட்டம் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பாக ஆக்சிசன் செறிவூட்டிகள் மற்றும்  சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சி

வெளிநாடு வாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள ஆக்ட் கிராண்ட்ஸ் என்ற அமைப்பு ரோட்டரி சங்கங்கள் மூலம் அகில இந்தியா முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள்  மற்றும்  ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க முன்வந்துள்ளார்கள். ஆக்ட் கிரான்ஸ்  மற்றும் ரோட்டரி அமைப்புகளுக்கு இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம்   ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப் படுகிறது.  இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும்  ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும்  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது  இந்த மாபெரும் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பினை  போலியோ ஒழிப்பு திட்டத்தை சிறப்பாக கையாண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான ரோட்டரியிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இதுவரை 15 ஆக்சிஜன்  செறிவூட்டிகள் மற்றும் 45 சிலிண்டர்கள்  வழங்கப்பட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று 10ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும்  25 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனைத்து புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி மாவட்டம் 3000தின் முன்னாள் ஆளுநர் அ.லெ. சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,  மற்றும்  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து 10ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும்  25 ஆக்சிசன் சிலிண்டர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதியிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் ராஜ்மோகன், இந்திராணி, நகரச் செயலாளர் க.நைனா முகம்மது, ரோட்டரி முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கான் அப்துல் கபார்கான், அருணாச்சலம், கனகராஜன் மாவட்ட செயலாளர் முருகப்பன்
மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, துணை ஆளுநர்கள் காசிராஜன், சிவாஜி  ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள் மாருதி கண.மோகன்ராஜ், முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் சேவியர், கருப்பையா  மற்றும் அனைத்து  ரோட்டரி சங்கத் தலைவர்கள், செயலாளர்கள், முன்னாள் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை புதுக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
திட்டத்தின் மொத்த மதிப்பு 15லட்சம். இதுவரை மொத்தமாக 50லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 82 = 86