
பாரம்பரியமிக்க புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவராக கேஎல்கேஎஸ் ராஜாமுகமது பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்த ஜோதி பணியேற்பு செய்து வைத்தார்.
புதுக்கோட்டை ரோட்டில் சங்கத்தின் 71 ஆம் ஆண்டு பணியேற்பு விழா சத்தியமூர்த்தி நகரில் உள்ள பேக்கரி மஹராஜ் திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவில் ரோட்டரி ஆளுநர் ஆனந்தஜோதி, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, தமிழக அரசின் தமிழ் செம்மல் விருத்தாளர் கவிஞர் தங்கமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ராஜாமுகம்மதுவிற்கு பணியேற்பு செய்து வைத்தனர்.

அவரைத் தொடர்ந்து செயலாளராக பல் மருத்துவர் டாக்டர் ராம் பிரகாஷ், பொருளாளராக அருண் ஆகியோர் பணியேற்று கொண்டனர். முன்னாள் ஆளுநர் சொக்கலிங்கம், மண்டல பிரதிநிதி ஆரோக்கியசாமி, துணை ஆளுநர் ஜெயக்குமார், முன்னாள் தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரோட்டரி சங்கங்கள் இதர மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்பித்தனர்.




