புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் 70ம் ஆண்டு தலைவராக பிரகாஷ் பதவியேற்றுக் கொண்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ரோட்டரி சங்கம் என்ற பெருமையை பெற்று பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் 70 ஆம் ஆண்டு பணி ஏற்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை சங்கரமடம் சாலையில் உள்ள கரீம் ஹாஜியார் திருமண மஹாலில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் முன்னாள் தலைவர் தனஞ் ஜெயராமச்சந்திரன் வரவேற்றார். முன்னாள் செயலாளர் ராஜகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து துணை ஆளுநர் கருப்பையா, மண்டல செயலாளர்கள் வெங்கடாசலம், ஆரோக்கியசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் ஆளுநர் சொக்கலிங்கம், தற்போதைய ஆளுநர் ஜெரால்டு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விஜய் டிவி புகழ் பேச்சாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். 2022-23ம் ஆண்டின் தலைவராக புதுக்கோட்டை டெல் கம்ப்யூட்டர் ஷோரூம் பிரகாஷூம் செயலாளராக பொறியாளர் பழனியப்பன், பொருளாளராக ஆரோக்கியசாமி ஆகியோர் பணியேற்று கொண்டனர். விழாவில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பாரம்பரியமிக்க புதுக்கோட்டை ரோட்டரி சங்கமானது ஒவ்வொரு காலகட்டத்திலும் பேரிடர் காலங்களிலும் ஏழை எளிய சமூகத்தில் பொருளாதார ரீதியில் சவால்களை சந்திக்கும் பொது மக்களுக்கு உதவுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது மட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏனைய ரோட்டரி சங்கங்களுக்கும் முன்னோடி சங்கமாகவும் இருந்து சமூகப் பணிகளை சிறப்பாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாகிகள் பணியற்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்ற ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 67 = 71