புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனோ தடுப்பூசி முகாம் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்

புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

புதுக்கோட்டை மாலையீடு, மறவப்பட்டி, ஆட்டான்குடி, கவிநாடு மேலவட்டம், கீழ்வட்டம் ஆகிய பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் மறவப்பட்டி எம்எஸ்எம் முத்துராமன் ரோட்டரி ஹாலில் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தால் நடத்தப்பட்டது ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஏ எல் சொக்கலிங்கம்,டாக்டர்கள் நவின், சூர்யா,ஆகியோர் முன்னிலை வகித்து தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தனர். டாக்டர் ஜீவ சுகாசினி
தனது குழுவினருடன் முகாமை திறம்பட செயல் படுத்தினார். ரோட்டரி சங்க தலைவர் தனஞ்ஜெயராமசந்திரன் தலைமை வகித்தார். டாக்டர் ராம்பிரகாஷ் திட்ட இயக்குநராக செயலாற்றி முகாம் சிறப்பாக நடைபெற உதவினார். ரோட்டரி சங்க செயலாளர் ராஜகுமார், ரோட்டரி சங்க பொருளாளர் கனகராஜன்,அருணாசலம்,முத்து,ஆரோக்கியசாமி,ராஜா முகமது, முஹமது நாசர், ராதாகிருஷ்ணன், இங்கர்சால் மற்றும் திரளான ரோட்டரி நண்பர்கள் முகாம் சிறப்புற நடைபெற தங்களின் பங்களிப்பினை வழங்கினர். இம்முகாமில் 304 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.முகாமை சிறப்புற நடத்தித் தந்த மருத்துவ அலுவலர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது.